Monday, January 30, 2006

காதல்

"காதல்" - நான் பல நாட்கள் கழித்து பார்த்த ஒரு உருக்கமான படம்.தத்ருபமான வடிவமைப்பு.உணர்ச்சி மிக்க கதாபாத்திரங்கள்.தமிழ் நாட்டில் பல இடங்களில் நடந்த/நடந்து கொண்டிருக்கும் ஒரு விஶயம்.நடைமுறையுடன் ஓட்டிய இயக்கம்.இளைஞர்களிடம் உள்ள ஒரு அசட்டு தைரியத்தை அழகாக காட்டியிருக்கிறார்கள்.பல நாட்களாக நான் பார்க்க காத்திருந்த படம் என்னை அவளவாக ஏமாற்றவில்லை.

இரு இன்றைய இளைய உள்ளங்களிடையெ சிறிய வயதில் வாழ்க்கையின் பாதை எவ்வளவு நெளிவு சுளிவுகள் கொண்டது என்று உணர்வதற்கு முன்பு ஏற்படுகின்ற ஒரு மயக்கம் என்பதை அழகாக கூறபட்டுள்ள ஒரு கதை.எனது பெற்றோருடன் பார்த்திருந்தால் இதுவாக தான் யோசித்திருப்பேன்.நானாக தனியர்றையில் உட்கார்ந்து கொண்டு பார்க்கும் போது ஒரு விதமாக அது எவ்வளவு முக்கியமான உண்மை என்பதை முதன் முறையாக என் அம்மா அப்பா இல்லாமல் நானாக கற்று கொண்டபோது என் மேல் எனக்கெ அளவில்லா பெறுமை.அதற்காக காதலிப்பது தவறு என்று சொல்லவில்லை.காதலித்த நேரம்தான் தவறாக தோன்றிற்று.

சென்னையில் வேலை தேடி வரும் ஒரு மிக சாதாரணமான இளைஞனின் தினப்படி வாழ்க்கை,லலிதா ஜுவெல்லரி அருகில் கடை வைத்து கொண்டு மற்றவர்களிடம் அடிக்கும் வரட்டு ஜம்பம்,தன் உடன் வசிப்பவனின் நண்பன் ஊரிலிருந்து ஓடி வந்து திருமணம் செய்து கொண்டான் என்றவுடன் வரவேற்பு கொடுக்கும் முறை இதெல்லாம் எனக்கு ரொம்பவும் நிஜமாக தோன்றியது.ஜாதி வெறி பிடித்த மக்கள் இன்னும் நிறைய இருக்கிறார்கள் என்பது இப்படிபட்ட உண்மை கதைகள் மூலம் ஊர்ஜிதபடுத்தபட்டுள்ளது.

ப்ளஸ் டூ படிக்கும் பெண்ணிடம் உள்ள துடிப்பு ,உலகை எதிர்க்கும் தைரியம் இதையெல்லாம் பார்க்கையில் காதல் ஒரு புனிதமான விஶயமா அல்லது அவர்களிடையே வளர்ந்த ஊடல் வெறும் மோகமா என்பது ஒரு கேள்வி..அப்படியே ஒரு சிறு வயது மோகம் என்று வைத்து கொண்டால் சில வருடங்களுக்கு பிறகு அந்த பெண் இவ்வளவு பாதிக்கபட்டது ஏன்?அப்படியானால் அவள் மற்றொருவருடன் வாழ்ந்தது இந்த கடந்த கால நினைப்பு இல்லாமலா?அன்று ரோட்டில் பார்க்கும் வரை அவன் நினைப்பு வர வில்லையா?அல்லது சூழ்நிலையினால் அவள் அப்படி ஒரு முடிவுக்கு வந்தாளா?என் அறிவுக்கு எட்டாத ஒரு விஶயம்..ஏனெனில் எனக்கு ஒரு ஆழந்த மனப்பாடு "முயற்சி செய்தார் தோல்வி அடையார் " .நடைமுறைக்கு சாத்தியப்படாது என்ற கருத்து பரவலாக இருக்கலாம்..ஆனால் இது எனது இடம் நான் சிந்திப்பதெ இங்கு இருக்கும் அனைத்தும்..உங்களில் யாரேனும் வேறு விதமாக சிந்தித்தால் அந்த கருத்துக்கள் அனைத்தும் வரவேற்க்கபடுகின்றன..மீண்டும் சந்திப்போம்!!.

12 comments:

Padma said...

ennala thanglish thaan comfortable-aa type panna mudiyum..so excuse me for this comment not being in tamil ;)
i think i have to see the movie myself before commenting on it..anyway, just wanted to say it's a cool attempt at a tamil blog :)

Subhashri said...

@dvijavanti..
yea..i just wanted to attempt tamil blogging..wanted to write more abt the movie but got tired of writing tamil equivalents
thanks for thee esteemed comment ;)

ambi said...

Hi bhooma,

tanq for visiting my first blog. yeeh, i'm cousin brother of 'dubukku'...

i think u viewed the movie with deep sense. it'a reflection of infactuation, i won't agree that it's a love btwn those 2 pple. ofcourse evrybody come across in their teen ages. few fell down, few jumps. that's it.

y no further visits to my blogs..? (ethellam oru pozhappa? nu kaari thuppa ninaithal, Yen blog la vanthu thuppavum.)

Dubukku said...

I am sure that I commented here before dunno why it disappeared?
hmm anyway commenting again

namma oor gramangalla jathi vittu kathal seithu kalyanam pannikarathu enbathu rombave kashtamana kariyam. I know of many cases where the gal was forced to marry someone else. This gals case is also same. But that's against her wish. So I dont see why she should not remember that when she see's him again...hmmmm

Padma said...

hey, i finally saw the movie..and here are my 2 cents:
to your question, i think guilt was the most powerful feeling she felt on seeing him on the road - the thought that she had a good life while he had none..
a well-taken movie overall!

tujesalam said...

Good thought bhooma. But She believed her lover would be in some good position. U can c in the last scene where she tells " i expected that u would lead a normal life like me". She was consoled in that way and got disappointed when she saw him in different condition.

KC! said...

hi Bhooma thanks for dropping by my blog. Normally en blog-layedhan welcome solven, but since you had chosen an old post, thot there was no point in adding a welcome there. Seri, ippo ungaluku velai kidaichiducha? All the best! Surname post padichen, en per-e tough-nu munnadi sonnanga, avalo periya per definite-a tough-nudhan solvanga..

Dreamer said...

Bhooma,

Niraiveraadha aasaigal maraivadhillai. Pin manadhil thoongi kondirukkum. Pala varduangalukku pin aasai undaakiyadhai meendum kaana niyarndhal, aasaigal meendum uyir perum.

When you give up chasing what you desire, it does not imply that the desire was flawed. It is possible that the forces working against you overpowered you, probably temporarily.

Kadhal padathin irudhiyil paartha Sandhyavirkum, mudhalil paartha Sandhyavirkum enakku oru periya vidhyaasam therindhadhu. Aval idam irundha thuruthuruppu poi oru sorvu therindhadhu, aangilathil sonnal 'It appeared as if something in her had died'. Avalullay irandhu ponadhay aval kaadhalin unmaiyana bimbam, aval muyarchi seyyadhadhu alla!

Krishna said...

Got here via NV sir's blog. Are you the Bhooma from Buffalo? This is Krishna from Gainesville..didn't know you blogged..:)

Narayanan Venkitu said...

kaadhal - naan innum paarkkadha padam. parkka vendum enra ennam irukku..parthuvittu meendum comment solkiren.

but ore oru question - காதலித்த நேரம்தான் தவறாக தோன்றிற்று..enru solli irukkireerkaL.

kaadhal neram kaalam parthu varadhae.!! Anyways , padathai first parthu vittu solgiren.

I also got your email!

Rajesh &Shankari said...

Hi Bhooma, In NV's blog or here , dont remember, you mentioned that you moved to sacramento, me 2. How do you like it?

Nice blog, BTW

shakuni said...

allo,

write something, what is this?